சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர்தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், 6 அதிமுக எம்எல்ஏ ராஜினாமாவை சட்டப்பேரவை தலைவர் ஏற்றதை எதிர்த்து மதுரையை சேர்ந்த பி.ஜி.சந்திரசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரே விவகாரத்தில் ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நிலுவை வழக்கை நீர்த்துப்போக செய்யும் வகையில் ஏன் மீண்டும் வழக்கு தொடர வேண்டும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய உள்ளதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

More Stories
டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் இன்று முதல்வர் விஜயைச் சந்திக்கும் ராகுல் காந்தி!
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் 15,000 போலீஸார் குவிப்பு