சூரியக் கட்சியின் சிடுசிடு சீனியர் தனது தோல்விக்கான காரணத்தை இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறாராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு,தனது தொகுதியில் பூத் வாரியாக பதிவான வாக்குகளின் பட்டியலை எடுத்துவைத்துக் கொண்டு அதன் பொறுப்பாளர்களிடம், “பகையை எங்கே வைத்தோம்?” என கேள்வி எழுப்பினாராம்.
அதற்கு அவர்கள், “எங்கேயும் வைக்கவில்லை… நமக்குள்ளேயே தான் வைத்திருந்திருக்கிறோம். நாங்கள் அனைவருமே சரியாக வேலை பார்த்தோம். ஆனால், அவர் மட்டும் ‘சரியா’ வேலை பாத்துட்டார்” என்று மாவட்டத்தின் முதன்மைப் புள்ளியைக் கையைக் காட்டினார்களாம்.
ஒன்றாக இருந்த ஜெயில் மாவட்டத்தை தனது மகனுக்காக இரண்டாகப் பிரித்தாராம் சீனியர். அதிலிருந்தே தனது அதிகாரம் குறைக்கப்பட்டுவிட்டதாக சீனியர் மீது முதன்மைப் புள்ளி வருத்தத்தில் இருந்தாராம். இந்த நிலையில், இந்தத் தேர்தலில் சீனியரை தோற்கடிக்க விசில் பார்ட்டியின் ‘மருத்துவர்’ வேட்பாளருக்கு ஆ‘னந்தமாக’ நிதியுதவி செய்தாராம்.
இதையெல்லாம் கட்சிக்காரர்கள் மென்று விழுங்கி சொன்னதைக் கேட்டு சுளீர் ஆன சீனியர், “காண்ட்ராக்டரா வந்தவன கட்சிக்காரனா மாத்தி கட்சியில சீட்டும்வாங்கிக் குடுத்தேன். அதுக்கு நன்றிக் கடனா, வளர்த்த கடா இப்ப மார்ல பாயுதாக்கும். இது விஷயமா நான் தம்பிக்கிட்ட பேசிக்கிறேன்” என்று சொன்னாராம்.

More Stories
டெல்லியில் கனமழை: பல பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்; விமான சேவை பாதிப்பு
‘அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்தியவர்’ – விஜயகாந்த் பிறந்த நாளில் முதல்வர் விஜய் புகழாரம்
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்து மீண்டும் வழக்கு: உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் வாபஸ்