August 25, 2026

உ.பி.யில் காணாமல் போன 5 அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அறிவிப்பு

புதுடெல்லி: உத்​தரப் பிரதேசத்​தின் ஜோன்பூர் மாவட்​டத்​தில் 5 அரசு பள்ளிகள் இணை​யதள செயல்​பாட்​டில் இருந்​தா​லும் அவை களத்​தில் இல்​லை. இவற்​றைக் கண்​டு​பிடித்து தரு​வோருக்கு ரூ.1 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்ய் சிங் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: உத்தர பிரதேச மாநிலம் ஜோன்​பூர் மாவட்​டத்​தில் 5 அரசு தொடக்​கப் பள்​ளி​கள் உள்​ளன. அவை களத்​தில் இல்லை என்​றாலும், அரசுப் பதிவு​களில் அவை செயல்​பாட்​டில் உள்​ள​தாகக் காட்​டப்​படு​கின்​றன. இந்த 5 பள்​ளி​களில் ஏதேனும் ஒன்றை யாராவது கண்​டு​பிடித்​துக் காட்​டி​னால், எனது சம்​பளத்​திலிருந்து ரூ.1 லட்​சம் பரிசு வழங்​கு​கிறேன்.

நகரக் கல்வி அதி​காரி ஒரு​வரின் கடிதப்​படி, தல்​கர் டோலா தொடக்​கப் பள்​ளி, மிசிர்​பூர் பெண்​கள் தொடக்​கப் பள்​ளி, கடான் அர்​சானி கூட்​டுப் பள்​ளி, உருது பஜார் தொடக்​கப் பள்ளி மற்​றும் பாக் ஹாஷிம் தொடக்​கப் பள்ளி ஆகியவை அந்​த 5 பள்ளிகளாகும். இவை அனைத்​தும் அரசு இணை​யதளத்​தில் இடம் பெற்​றுள்​ளன, ஆனால், குறிப்​பிடப்​பட்ட இடங்​களில் அவை தற்போது இல்​லை. அங்கு ஆசிரியர்​களோ, குழந்​தைகளோ அல்லது கட்​டிடங்​களோ இல்​லை.

உ.பி.-​யில் பள்ளி கட்​டிடங்​கள் இருந்​தும் அவை மோச​மான நிலையில் இருப்​ப​தை​யும், உள்ளே குப்​பைகள் கொட்​டிக் கிடப்பதை​யும், கழிப்​பறை​கள் சிதிலமடைந்த நிலை​யில் இருப்பதை​யும் நான் ஏற்​கெனவே சுட்​டிக்​காட்டி உள்​ளேன். இதுகுறித்து அரசு விசா​ரணை நடத்த வேண்​டும். இருப்​பிடமே இல்லாத இந்த 5 பள்​ளி​கள் ஏன் இன்​னும் கல்விக்​கான ஒருங்​கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE Plus) இணை​யதளத்​தின்​படி, செயல்​பாட்​டில் உள்​ள​தாகக் காட்​டப்​படு​கின்றன என்​பது குறித்து விளக்​கம் அளிக்க வேண்​டும்.

ஆம் ஆத்மி கட்​சி​யின் உ.பி. தலை​வர் பங்​கஜ் சிங், நொய்​டா​வில் உள்ள ஒரு பள்​ளி​யின் சிதிலமடைந்த நிலை​யைக் காட்​டும் வகையில் ஒரு காணொளியை வெளி​யிட்​டார். இருப்​பினும், அப்பள்​ளியைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்​ப​தற்​குப் பதிலாக, அவர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இவ்​வாறு அவர்​ தெரிவித்தார்​.

Spread the love