சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்பட்டன. ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடுமுழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12.5 லட்சம் மருந்தகங்களும், தமிழகத்தில் மட்டும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் கடையடைப்பு செய்யப்பட்டன.
மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்தகங்கள், அப்போலோ, மெட்பிளஸ், துளசி பார்மசி, முத்து பார்மசி போன்ற சங்கிலி தொடர் மருந்தகங்கள், முதல்வர் மருந்தகம், தமிழ்நாடு கூட்டுறவு சங்க மருந்தகங்கள், பிரதம மந்திரி ஜன் ஔஷதி கேந்திரா போன்ற அரசு ஆதரவு சில்லறை விற்பனை நிலையங்கள் என சுமார் 5 ஆயிரம் மருந்தகங்கள் கடையடைப்பில் பங்கேற்கவில்லை.
அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையால் மாவட்ட வாரியாக உதவி எண்கள், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கமும் மாவட்ட வாரியாக உதவி எண்களை அறிவித்திருந்தன.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை கேட்டு பெற்றனர். ஆனாலும், வழக்கமாக பயன்படுத்தும் நிறுவனங்களின் மாத்திரை, மருந்துகள் கிடைக்காததால் பலர் அவதிக்குள்ளாகினர்

More Stories
வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
“தமிழக அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாட வேண்டும்” – வைகோ
தமிழக அமைச்சர்களாக காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 23 பேர் பதவியேற்பு