லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பாண்டா மாவட்டம் கடந்த திங்கட்கிழமை அன்று இந்தியாவின் மிக வெப்பமான பகுதியாக உருவெடுத்தது. அங்கு பகல் நேர வெப்ப நிலை 47.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி, உலகின் மிக உயர்ந்த வெப்பநிலையை எட்டியுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மாவட்டத்தில் மே மாதத்தில் மிக அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 27-ம் தேதியும் இந்த மாவட்டத்தில் 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதையடுத்து, உலகின் வெப்பமான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மேலும், மே 19 (48.2 டிகிரி), மே 17 (46.4 டிகிரி) மற்றும் ஏப்ரல் 17 (45.4 டிகிரி) ஆகிய மூன்று நாட்களில் பாண்டா ஆசியாவிலேயே மிக அதிக வெப்ப நிலையைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், பாண்டா மாவட்டத்தின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த வெப்ப நிலையாக ஜூன் 10, 2019 அன்று பதிவான 49.2 டிகிரி செல்சியஸ் மட்டுமே நீடிக்கிறது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் என்னவென்றால், இந்த நகரம் அடிக்கடி 47 மற்றும் 48 டிகிரி செல்சியஸைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
வறண்ட பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு, மறைந்து வரும் பசுமைப் போர்வை, இடைவிடாத மணல் கொள்ளை மற்றும் வற்றிப்போகும் ஆறுகள் ஆகியவற்றால், பாண்டா மாவட்டம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு வெப்பத் தீவாக மாறி வருகிறது.

More Stories
நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல்
எரிசக்தி சேமிப்பு முயற்சி: ஆய்வுப் பயணங்களை தவிர்க்க நாடாளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல்
செங்கோட்டையன் இலாகா மாற்றம் – தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை?