ஆகஸ்ட். 29
திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் நிலை கல்வியாளர் டாக்டர் ஜெயபிரகாஷ் காந்தி மாணவ மாணவிகளிடயே கல்வியின் தரம் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து கலந்துரையாடினார் இந் நிகழ்ச்சிக்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ் டி. சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் என். யுவராஜ் முன்னிலை வகித்தார்.
அப்போது அவர் மாணவ மாணவிகள் மத்தியில் பேசும்போது தொழில்நுட்பம் நிறைந்த இந்த உலகில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் தனி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் எதிர்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்களை சமாளிக்க முடியும்.
இன்றைக்கு நீங்கள் படித்து வரும் இந்த வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி என்பது தமிழகத்தில் சிறந்த பொறியியல் கல்லூரியாக இருக்கிறது. அதேபோல் இன்றைக்கு தொழில்நுட்பத்தை மட்டும் நீங்கள் கற்றுக் கொண்டால் போதாது. AI தொழில்நுட்பம் நீங்கள் கற்றுக் கொண்டால் முன்னோடி நிறுவனங்களில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எதிர்காலத்தில் வரவிருக்கும் புதிய பாடங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை AI மூலமாகவே செய்து விட முடியாது (மேன்பவர்) மனித உழைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். ப்ளூ காலர் வந்துவிட்ட நிலையில் நம் மாணவர்கள் இன்னும் ஒயிட் காலரிலே தான் இருக்கிறார்கள் இது அவர்களுக்கு ஒரு சேலஞ்ஜாகத்தான் உள்ளது.
அதேபோல் ரயில்வே துறையில் புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. எந்தத் துறையானாலும் மாணவர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
பழனி
29-08-2026