September 10, 2026

கரூரில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டிகள் துவக்கம். மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.

கரூர்செப் 10

கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் அவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2026 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் கரூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக் காண விளையாட்டு போட்டிகள் துவங்கி வரும் 27ஆம் தேதி வரை பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் நடைபெற உள்ளன. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் மூலம் 11617 பள்ளி மாணவ மாணவிகளும் ,1288 கல்லூரி மாணவ மாணவிகளும் 1770 மாற்று திறனாளிகள் மற்றும் 4491 அரசு அலுவலர்கள் மற்றும் 19345 பொதுமக்கள் என மொத்தம் 50023 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ 3000 இரண்டாவது பரிசாக 2000 ,மூன்றாவது பரிசாக 1000 வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். கரூர் மாவட்டத்தில் இப் போட்டியில் 5 பிரிவுகளில் வெற்றி பெறும் வீரன் வீராங்கனைகளுக்கு சுமார் ரூ 42.30 லட்சம் மதிப்பீட்டில் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.  மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே விளையாட்டில் ஆர்வம் மேலும் அதிகரிப்பதுடன் அவர்களிடம் உள்ள விளையாட்டு திறமைகளை கண்டறிந்து உரிய பயிற்சி மற்றும் ஊக்கத்தை வழங்கி எதிர்காலத்தில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க வருகை தந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்கிவிக்கும் விதமாக தனது வாழ்த்துக்களை மைதானத்திற்குள் சென்று தெரிவித்தார். மேலும் தடகளம், ஹாக்கி, மற்றும் சிலம்பம் ஆகிய போட்டிகளை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனசேகரன் ,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Spread the love