October 14, 2026

கரூர் அக்13

கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்  கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் யுபிஐ பண பரிவர்த்தனை ரூ2000 மேல் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து அமைதி போராட்டம் கரூர் கடை வீதியில் கே.எஸ்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் பால்ராஜ் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத்தலைவர் கந்தசாமி  மாநில இணைச் செயலாளர்கள் சக்திவேல், ராஜேந்திரன், செல்வம், அமராவதி வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர்  சிவசங்கர், ஆட்டோ மொபைல் அசோசியேஷன் தலைவர் பாரதி, உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் லோகநாதன்,

அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் மாதவன்,  பொருளாளர் சங்கர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் நந்தகோபால், கன்ஸ்யூமர் அசோசியேசன் தலைவர் புஷ்பராஜ் மற்றும் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகத்தின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் கே.எஸ். வெங்கட்ராமன் கூறுகையில்,

 இந்தியா முழுவதும் யூபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும் இதனால் வாடிக்கையாளர்களின் நலன் பாதிக்கப்படும்.

அரசு டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கம் செய்துவிட்டு தற்போது புதிய வரியினை வணிகர்களுக்கு மட்டும் என்று கூறி வரி விதித்தால் இதனால் நேரடியாக வாடிக்கையாளர்கள் பாதிக்க வாய்ப்புள்ளது எனவே வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமம் ராஜா உத்தரவின் பேரில் இன்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள அமைதி போராட்ட ம் மேற்கொண்டு வருகிறோம் கரூர் மாவட்டத்தில் மட்டும் 25 இடங்களில் பல்வேறு வர்த்தக சங்க நிர்வாகிகள் அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் கரூர் கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர் .

Spread the love