October 14, 2026

பத்தனேந்தல் கண்மாயில் ஆக்கிரமிப்பு; மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக் கோரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம், பத்தனேந்தல் கண்மாயில் கோவில்கள் கட்டுதல், மரங்கள் நடுதல், மண் கொட்டுதல் மற்றும் குப்பைகள் கொட்டுதல் மூலம் ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்மாயை நம்பி 375 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், மூன்று கிராம மக்களும் பொதுப் பயன்பாட்டிற்காக நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்வரத்துப் பாதைகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love