கொனாக்ரி: கினியாவில் கனமழை பெய்ததால் குப்பை மலை சரிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் தலைநகர் கொனாக்ரியில் டார் எஸ் சலாம் என்கிற மிகப்பெரிய குப்பைகிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் டன் குப்பைகள் மலை மலையாக குவிக்கப்பட்டிருந்தன.
இது குப்பைக் கிடங்கை சுற்றி வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே குப்பைக் கிடங்கை மூடி, குப்பைகளை வேறு இடத்துக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் டார் எஸ் சலாம் குப்பைக் கிடங்கு மூடப்பட இருந்தது.
இந்த சூழலில் கொனாக்ரியில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழையால் கிடங்கில் இருந்த குப்பை மலை ஒன்று அதிகாலை 3 மணிக்கு சரிந்து, குடியிருப்பு பகுதி மீது விழுந்தது. அப்போது வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் உயிரோடு புதைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

More Stories
செங்கடல் பகுதியில் சவுதி எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணை தடுப்புக் காவலில் வைத்த அதிகாரிகள்
16 வயதிலேயே சிஏ பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவன்