டெல்லி: செங்கோட்டை கார் குண்டு வெடிப்பிற்கு அல் கொய்தாவின் துணை அமைப்பே காரணம் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “அல்-கொய்தாவின் கிளை அமைப்பாக `அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் செயல்படுகிறது. அன்சார் கஸ்வத் உல் ஹிந்த் அமைப்பு தான் தாக்குதலுக்கு காரணம் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, 11 குற்றவாளிகளுக்கு எதிராக 7,500 குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்துள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையை ஆக. 27-ல் ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. மேலும், அரசு தரப்பின் புகார் மனு, ஆயிரக்கணக்கான பக்கங்களுடன் இருப்பதுடன், 580-க்கும் மேற்பட்ட சாட்சிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.
இந்த நிலையில், செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐ.நா. பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வங்கதேசத்திலும் தங்களின் குழுக்களை நிறுவுவதற்காக அந்நாட்டையும் அல்-கொய்தா சுரண்டுவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.

More Stories
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலியிடங்களை 3,000 ஆக உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்
பழநி முருகன் கோயில் சொத்து, ஆவணங்கள் என்னென்ன? – திருச்சி மண்டல கூடுதல் ஆணையர் ஆய்வு
கோயில் திருவிழாவில் ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் எச்சரிக்கை