August 13, 2026

தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை 3 நட்சத்திர ஓட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

புதுடெல்லி: மத்​திய சுகா​தார மற்​றும் குடும்ப நலனுக்​கான நாடாளுமன்ற நிலைக் குழு​வின் 176-வது அறிக்​கை, நாடாளுமன்றத்தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் வழங்கப்பட்டுள்ள சில முக்​கியப் பரிந்​துரைகள்: பெருநகரங்களில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​களின் அறை வாடகை்யை 3 நட்​சத்​திர ஓட்​டல் கட்​ட​ணத்​துடன் ஒப்​பிட்டு நிர்ணயிப்​பதுடன், அதனுடன் பயிற்சி மருத்​து​வர், செவிலியர், உணவு மற்​றும் துப்புரவுச் செல​வு​களை மட்​டுமே கூடு​தலாகச் சேர்க்க அனு​மதிக்க வேண்​டும்.

சிகிச்சை தொடங்​கு​ம்முன், நோயாளி​களுக்​குச் சட்​டப்​பூர்​வ​மாகச் செல்​லுபடி​யாகும் முழு​ சிகிச்​சைச் செலவு மதிப்​பீட்டு அறிக்கையை மருத்​து​வ​மனை​கள் கட்​டா​யம் வழங்க வேண்​டும். நோயாளி தேர்வு செய்​யும் அறை​யின் தரத்​துக்கு ஏற்ப சிகிச்​சைக் கட்​ட​ணத்தை உயர்த்​தும் முறையை ரத்து செய்ய வேண்​டும். அனைத்து அறை​களுக்​கும் ஒரே மாதிரி​யான சிகிச்​சை் கட்டணமுறை வேண்​டும்.

ஆயுஷ்​மான் பாரத் திட்​டத்​தி்ல்் இணைக்​கப்​பட்​டுள்ள தனி​யார், அரசு மருத்​து​வ​மனை​களி​லும் ‘அம்​ரித்’ மற்​றும் ‘ஜன் அவுஷதி’ மலிவு​விலை மருந்​தகங்​களை அமைப்​பது கட்​டாய​மாக்​கப்பட வேண்​டும். புற்​று​நோய், அரி​தான நோய்​ சிகிச்​சைகளுக்கு உதவ, கார்ப்​பரேட் சமூகப் பொறுப்பு நிதி மற்​றும் நன்​கொடைகளை ஒருங்​கிணைத்து தனி தேசி​ய, ​மாநில சுகா​தார நிதியை உருவாக்க வேண்​டும்.

இந்​தி​யா​வில் சராசரி​யாக ஒருமுறை மருத்​து​வ​மனை​யில் அனு​மதிக்​கப்​படும் குடும்​பத்​துக்கு ரூ.34,064 வரை செல​வாகிறது என்றும், உலக சுகா​தார அமைப்​பின் பரிந்​துரைப்​படி 1,000 பேருக்கு 3.5 படுக்​கைகள் இருக்க வேண்​டிய இடத்​தில் இந்தியாவில் 1.3 படுக்​கைகள் மட்​டுமே உள்​ளன. எனவே, கிராமப் புற சுகா​தா​ரக் கட்​டமைப்பை மேம்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்​ளது.

Spread the love