திருப்பதி: ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், கடப்பா, நெல்லூரில் கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருப்பதி நகரின் எஸ்டிவி நகரை சேர்ந்த 65 வயது பெண்மணிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More Stories
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டில் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 26 பேர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் காயம்
பிரதமர் மோடியின் ‘ராஜதந்திர’ சாதனைகள்: பிரிக்ஸ் 2026-ல் இந்தியா பெற்றது என்ன?
‘சத்தியத்தின் வெற்றி’ – ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்