திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த வாரம் டாஸ்மாக் மண்டல மேலாளரை சந்தித்து தங்களுக்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில் குறிப்பாக ‘காலி பாட்டில் பை-பேக்’ (Buy-back) திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தினால் ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமையும், காலதாமதமும் ஏற்படுகிறது. வெளி முகமைகள் (Outsourcing/Tendors) மூலமாக மட்டுமே பாட்டில்களைச் சேகரிக்க வேண்டும். தற்போது மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ள சுமார் 30 டாஸ்மாக் கடைகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.மேலும் இரவு 10 மணிக்குக் கடைகள் மூடப்படும் போது, போலீசார் உடனடியாகக் கடைகளை அடைக்க வற்புறுத்துகின்றனர். ஆனால், கடைகளில் 20 முதல் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்குகள் இருக்கும் நிலையில், அன்றாட விற்பனை விவரக் கணக்குகளைச் சரிபார்த்து அரசுக்கு அறிக்கை அனுப்ப ஒன்றரை மணி நேரம் வரை தேவைப்படுகிறது. எனவே, இரவு 10 மணிக்கு மேல் கணக்குகளைச் சரிபார்க்க அவகாசம் தர வேண்டும் அல்லது இரவு 9 மணிக்கே விற்பனையை நிறுத்த அனுமதிக்க வேண்டும். ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 23 வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த, உயர் கல்வி கற்ற ஊழியர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்குத் தகுந்த காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் 31,000 ரூபாயும், சீனியாரிட்டி அடிப்படையில் 70,000 ரூபாய் வரையும் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அளித்துள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து 25 ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தற்பொழுது வரை எந்தவித அறிவிப்பும் அரசிடமிருந்து வராததை தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 1; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 113.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 1;weatherinfo: weather?Sunny, icon:0, weatherInfo:100;temperature: 41;

More Stories
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா:
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மாயாண்டி கோவில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு