காங்கிரஸ் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருப்பூர், மே. 22-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக நினைவஞ்சலி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.மாநகர் மாவட்டத் தலைவர் நல்லூர் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் திருவுருவப் படம் தாங்கிய வாகன ஊர்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.ஊர்வலத்தின் போது, தொண்டர்கள் ராஜீவ் காந்தியின் புகழைப் போற்றியும், காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அவரது சாதனை விளக்க நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.நிகழ்வின் முக்கியப் பகுதியாக, கலந்துகொண்ட அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில், காங்கிரஸ் நிர்வாகி என். ராமகிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார். இதில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
விவசாயிகள் குறைதீர்க்கம் நாள் கூட்டம்:
தவெக அமைச்சரவையில் விசிக: ஆ.ராசாவின் கண்டன ட்வீட்களால் சர்ச்சை
22.05.26