சென்னை: பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை.
இந்த நிலையில், ‘விபி-ஜிராம்ஜி’ என்ற புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்கள் மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது.
எந்தெந்த மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என்பது ஜூலை 1-ம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும்.
கிராமப்புற மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட மிக கொடூரமான நடவடிக்கை இது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

More Stories
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு