கொடைக்கானல்: மலைச்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், டிசம்பர் 1 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நீளமான வாகனங்களுக்கான தடை முறையாகப் பின்பற்றப்படாததால், மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் வியாபாரிகளும் 12 மீட்டருக்குக் குறைவான நீளமுள்ள வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Day: November 5, 2026
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும். மேலும், சென்னை எழும்பூர்–திருநெல்வேலி, தாம்பரம்–மானாமதுரை, எழும்பூர்–திருச்சி இடையே நவம்பர் 6 முதல் 10 வரை பல்வேறு நேரங்களில் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் கட்டணம் ரூ.6,000-லிருந்து ரூ.5,500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் கால சலுகையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் எடை 10 கிலோவிலிருந்து 30 கிலோவாகவும், கைப்பை எடை 7 கிலோவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 55,310 பேர் இக்கப்பல் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்கள் இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவில்...
புதுடெல்லி: அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் பணியாற்றும் அக்னி வீரர்களின் பணிக்காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே 25 சதவீத வீரர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்படவுள்ளது. நீட்டிக்கப்பட்ட பணிக்காலத்துக்குப் பிறகு தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் பெறவும் வாய்ப்பு வழங்கப்படும். அடுத்த மாதம் பணிக்காலம் முடிவடையவிருந்த சுமார் 18,000 வீரர்கள் இதனால் பயனடைவார்கள். இம்முடிவுக்காக பிரதமர் மோடிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், எலி காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவும் அபாயம் குறித்து சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலி, நாய் உள்ளிட்ட விலங்குகளின் சிறுநீரால் மாசுபட்ட நீர், உடலில் உள்ள காயங்கள் மற்றும் கண், மூக்கு, வாய் வழியாகத் தொற்று ஏற்படுத்தலாம். முக்கிய 7 அறிகுறிகள்: அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, வாந்தி அல்லது குமட்டல், குளிர் நடுக்கம், வயிற்றுப்போக்கு, கண்கள் சிவத்தல். உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். தடுப்பு நடவடிக்கைகள்: தேங்கிய மழைநீர், சேற்றில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்புக் காலணிகள் அணிய வேண்டும். காயங்களை மூடிப் பாதுகாக்க வேண்டும். மாசுபட்ட நீரில் சென்றுவந்தால் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். மழைநீருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி மற்றும் கேது பெயர்ச்சி காரணமாக 8 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழில் வளர்ச்சி, பணவரவு, பதவி உயர்வு, சொத்து சேர்க்கை, குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட நற்பலன்கள் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் செல்வம், சுகபோகம், காதல், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சிக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். நவம்பர் 6-ஆம் தேதி கன்னி ராசிக்குள் வக்ர நிலையில் நுழையும் சுக்கிரன், நவம்பர் 14-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அதேபோல் நவம்பர் 25-ஆம் தேதி கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியடைகிறார். இந்த இரு கிரக மாற்றங்களும் குறிப்பிட்ட 8 ராசிகளுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! மேஷம் – பணக்கஷ்டம் நீங்கி செல்வம் சேரும்! மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பண நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதுடன், உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதால் சேமிப்பு உயரும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். கன்னி – பதவி உயர்வு, எதிர்பாராத பணவரவு! கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கலாம். பொருளாதார நிலை மேம்படுவதுடன் வீடு, வாகனம் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேற வாய்ப்புள்ளது. துலாம் – தொழிலில் வளர்ச்சி; வருமானம் உயரும்! துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நேர்கதி புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும். வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான தகவல்கள் கிடைக்கலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் வேகமெடுக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செலவுகளில் கவனம் தேவை. கும்பம் – புதிய வருமானம்; முதலீட்டில் லாபம்! கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வருமான வழிகள் உருவாகும். பணியிடத்தில் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே செய்த முதலீடுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். இருப்பினும் பெரிய முதலீடுகள் மற்றும் கடன் தொடர்பான முடிவுகளை அவசரப்படாமல் ஆராய்ந்து எடுப்பது நல்லது. கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்! ரிஷபம் – தொட்ட காரியங்களில் வெற்றி! ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம். நீண்ட நாட்களாக முடங்கியிருந்த பணிகள் மீண்டும் தொடங்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதுடன் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமும் ஆதாயம் ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னம்பிக்கை அதிகரித்து, திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் சூழல் உருவாகலாம்....
