June 27, 2026

மூத்த குடிமக்களுக்கு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

சென்னை: தமிழ்​நாடு மூத்த குடிமக்​கள் சங்க கூட்​டமைப்பு தலை​வர் வி.​ராம​ராவ் வெளி​யிட்ட அறிக்​கை: மூத்த குடிமக்​கள் சங்க கூட்​டமைப்பு மற்​றும் ஹெல்ப் ஏஜ் இந்​தியா ஆகியவை இணைந்​து, தமிழக மூத்த குடிமக்​கள் ஆணை​யம் ( Senior Citizens Commission of Tamil Nadu ) அமைக்க தமிழக அரசின் சமூக நலத்​துறையை வலி​யுறுத்​துகின்​றன.

புள்​ளி​விவரங்​கள் மற்​றும் திட்ட அமலாக்க அமைச்​சகத்​தின் அறிக்​கை​யின் படி, தமிழகத்​தில் 1.04 கோடி மூத்தகுடிமக்​கள் இருப்​பார்​கள் என்​றும், 2031-ம் ஆண்​டுக்​குள் இந்த எண்​ணிக்கை 1.42 கோடி​யாக உயரும் என்​றும் கணிக்​கப்​பட்​டுள்​ளது.

கேரள அரசு, மூத்த குடிமக்​களுக்​கான ஆணையம், மூத்த குடிமக்​களுக்கு தனி பட்​ஜெட் மூலம் நிதிஒதுக்​கீடு, மூத்த குடிமக்​களுக்​கான பிரத்​யேக​மான துறை ஆகிய​வற்றை வழங்​கி​யுள்​ளது.

எனவே, தமிழக அரசு, மூத்த குடிமக்​களுக்​கான ஆணை​யத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார்.

Spread the love