சென்னை: தமிழ்நாடு மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் வி.ராமராவ் வெளியிட்ட அறிக்கை: மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா ஆகியவை இணைந்து, தமிழக மூத்த குடிமக்கள் ஆணையம் ( Senior Citizens Commission of Tamil Nadu ) அமைக்க தமிழக அரசின் சமூக நலத்துறையை வலியுறுத்துகின்றன.
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறிக்கையின் படி, தமிழகத்தில் 1.04 கோடி மூத்தகுடிமக்கள் இருப்பார்கள் என்றும், 2031-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 1.42 கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு, மூத்த குடிமக்களுக்கான ஆணையம், மூத்த குடிமக்களுக்கு தனி பட்ஜெட் மூலம் நிதிஒதுக்கீடு, மூத்த குடிமக்களுக்கான பிரத்யேகமான துறை ஆகியவற்றை வழங்கியுள்ளது.
எனவே, தமிழக அரசு, மூத்த குடிமக்களுக்கான ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

More Stories
உதவிப் பேராசிரியர் பணி போட்டித் தேர்வில் முறைகேடா? – அரசு விசாரிக்க அன்புமணி கோரிக்கை
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்
இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு