பழனி ஜூலை 14
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி அந்த நிலத்துக்கான தர்க்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் உள்ளார். தற்பொழுது அந்த நிலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகன நிறுத்தும் இடமாக உள்ளது. அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூபாய் 100 கோடி ஆகும். இந்நிலையில் தண்டபாணி சுவாமி மடத்து நிலம் முறைகேடாக தனியார் இரண்டு பேருக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது பற்றி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் பழனி தண்டபாணி சுவாமி மடத்து நிலத்தை சட்டவிரோதமாக பதிவு செய்ததாக பழனி சார் பதிவாளர் மற்றும் நிலத்தை வாங்கிய மற்றும் விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பழனி அடிவாரம் போலீசில் கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன் பேரில் பழனி அடிவாரம் போலீசார், பழனி சார் பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ் வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி ஆகிய நான்கு பேர் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையொட்டி நேற்று பழனி அடிவாரம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், பழனி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினர். இந்நிலையில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பணிநீக்கம் செய்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஆனந்த் உத்தரவிட்டார். இதனால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
31-08-2026
த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருப்பவர்களுக்கும் பாரபச்சம் இல்லாமல் பதவிகள் வழங்கப்படும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் R. P.ரமேஷ் பேட்டி.