பழனி ஜூலை 14
பழனியைச் சேர்ந்தவர் முருகபிரபு வயது 43. இவர் செல்போன் கடை உரிமையாளர் ஆவார். இவர் உள்பட பத்து தமிழர்கள் மற்றும் ஐந்து பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வியட்நாமுக்கு பிரபல செல்போன் நிறுவனம் சுற்றுலா அழைத்துச் சென்றனர். இதில் படகில் சென்ற பொழுது திடீரென படகு கவிழ்ந்தது இதில் நீரில் பலர் பலியாகினர். இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் மற்றும் வியட்நாம் அரசு ஆகியவை இணைந்து இறந்தவர்கள் உடல்நிலை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுத்தனர். அதன்படி முருக பிரபு உடல் இன்று விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்டு, பின்பு அங்கிருந்து இன்று காலை கோவை விமான நிலையம் கொண்டுவரப்படுகிறது. பின்பு ஆம்புலன்ஸ் மூலம் பழனி கொண்டுவரப்படுகிறது இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றனர்.

More Stories
31-08-2026
த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருப்பவர்களுக்கும் பாரபச்சம் இல்லாமல் பதவிகள் வழங்கப்படும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் R. P.ரமேஷ் பேட்டி.