புதுடெல்லி: அரசின் பல்வேறு சேவைகளை வழங்கும் UMANG தள பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை பகிர்ந்துள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை UMANG தளம் மூலம் பயனர்கள் பெற முடியும். சுமார் 2,400 சேவைகளை இதன் கீழ் பயனர்கள் பெற முடியும். இதை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அந்த பயனர்களின் எண்ணற்ற தரவுகள் கசிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் UMANG தள பயனர்களின் யுஏஎன் விவரம், எல்பிஜி சிலிண்டர் புக்கிங் விவரம், ஆதார் எண் உள்ளிட்டவை கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஎப்ஓ சேவை சார்ந்து சுமார் 40 கோடி முறை UMANG தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் சார்ந்து வேண்டிய நடவடிக்கைகளை செக்யூரிட்டி குழுவினர் மேற்கொண்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘தி இந்து’ ஆங்கில செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, UMANG சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த தளத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை பயனர்கள் பெற முடியும்.

More Stories
மும்பை, டெல்லியை முந்திய பெங்களூரு – உலகின் சிறந்த இரவுப் பொழுது நகரங்கள்
“இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாகவே காங். பயன்படுத்துகிறது” – மோகன் யாதவ் விமர்சனம்
மேலும் 5 எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம்