August 2, 2026

கீழக்கரையில் ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’ திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு பள்ளி எதிர்புறம், அனஸ் காம்ப்ளக்ஸில் புதிதாக தொடங்கப்பட்ட மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங் 

நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல்மாலிக் தலைமையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி இறை வசனம் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயல் தலைவர் முஹைதீன் பாரூக், செயலாளர் கீழை அஸ்ரப், பாரூக் ராஜா முஹம்மது, அஹமது நதீர், தொகுதி செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அலி, சேக், மோர்குளம் இலியாஸ், சீனாக்கா, ஜின் செய்து அபுதாஹீர், சலீம், ஜகுபர் அலி, ஹமீது பாக்கர், சுன்னத் ஜமாஅத் நகர் தலைவர் கபூர், இலியாஸ், ரிச்வேல்ட் சேகு, இமாம் அலி, முஜாஹிதீன், செல்லா, அன்சாரி, கும்பிடு மதுரை, அபுதாஹீர், ஜாசீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அசாருதீன், அற்புதம், திமுகவைச் சேர்ந்த ரஹ்மான், கபீர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, புதிய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இறுதியில், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Spread the love