ஒட்டன்சத்திரம் ஆகஸ்ட்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட் அருகே ஸ்ரீ கரைமாரியம்மன் ஏஜன்சீஸ் (எஸ்.கே.எம் ஏஜன்சீஸ்) இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் க.தங்கவேல் தலைவர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான அர.சக்கரபாணி கலந்துகொண்டு எஸ்.கே.எம்.ஏஜன்சீஸை துவக்கிவைத்தார். திறப்பு விழாவிற்கு வருகைதந்த அனைவரையும் பி.பாலசுப்பிரமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காந்திகாய்கறி மார்க்கெட் சங்க செயலாளர் கே.ராசியப்பன் ,பொருளாளர் டி.சீனிவாசன் துணைத்தலைவர் உதயம் ராமசாமி,துணைச்செயலாளர் சிவபார்வதி எம்.கருப்புச்சாமி, கலந்துகொண்டனர் மேலும் எஸ்.கே.எம்.ஏஜன்சீஸ்முதல் விற்பனையை பழனி தெற்கு மண்டல மேலாளர்எஸ்.பிரபு சுந்தர்துவக்கி வைத்தார் பகவான்டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கே.சுப்பிரமணி முதல் விற்பனையை பெற்றார். மேலும் கே.வி.முருகானந்தம் சிவபாக்கியம் எஸ்.ஆர்.கே.பாலு பொருளாளர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பி.ஜே.வி.குருப்ஸ் விக்னேஸ் ஜெயராமன் பி.ஜே.வி. பி.ஜெயராமன் ஸ்ரீ கரைமாரியம்மன் ஏஜன்சீஸ் நன்றி தெரிவித்தார்.

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்