September 5, 2026

கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்க்கு பாராட்டு கோயில்களில் செல்போனுக்கு ₹5 கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த கிருஷ்ண ஜெயந்திவிழாவில் அர்ஜுன் சம்பத் பேட்டி,,,

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் மாநில இளைஞரணி செயலாளர் சிட்கோ வசந்த் ஏற்பாட்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.கிருஷ்ண ஜெயந்தி ஒரு தேசிய திருவிழா. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதல்முறையாக கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அவருக்கு எனது நன்றி.கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இந்துக்களை புறக்கணித்து வந்த திமுக அரசு, இனியாவது அனைத்து மதங்களின் பண்டிகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை இந்துக்களின் புனித நூல். பகவத் கீதையின் மறுவடிவமாக திருக்குறள் உள்ளது. எனவே பகவத் கீதை மற்றும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூல்களாக அறிவிக்க வேண்டும்.

கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் ஆலயம் அமைக்க வேண்டும். .கிருஷ்ணர் கோபாலனாக இருந்து பசுக்களை பாதுகாத்தவர். எனவே தமிழகத்தில் பசுவதை தடைச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லை எனக் கூறும் நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கார், சம்பள உயர்வு உள்ளிட்ட செலவுகளை தவிர்க்க வேண்டும். கோயில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதையும் தவிர்க்க வேண்டு செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தலாம். ஆனால் செல்போனை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது தேவையற்றது. கோயில்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், செல்போன் பாதுகாப்பிற்கும் கட்டணம் வசூலிப்பதை திரும்பப் பெற வேண்டும்.திமுக சிறுபான்மை வாக்குகளை மட்டுமே நம்பி செயல்படாமல், இந்து மக்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவித்து, அனைத்து மத மக்களையும் சமமாக நடத்த வேண்டும்.என்று அவர் கூறினார்

இந்த விழா ஏற்பாடு சிட்கோ வசந்த் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் வெங்கடேஷ் காசி பாளையம் கருப்பு, பாண்டியன்,அருண்,கார்த்திக்,ஜிவா.முருகன்.அருண். உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

Spread the love