October 8, 2026

தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்

கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு, அரசு கலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா மேற்பார்வையில் ரத்த தானம் பெறப்பட்டது.

முகாமை செஞ்சிலுவை இளம் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அமிர்தராஜ், இளம் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெயபிரகாஷ், ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஷ்ணுதேவன் மற்றும் தேசிய மாணவர் படை கேப்டன் முனைவர் விநாயகம் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

முகாமில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.

Spread the love