October 10, 2026

கீழக்கரை நகராட்சியில் கழிவுப் பிரிப்பு அங்கீகார ஸ்டிக்கர் ஒட்டும் பணி!

கீழக்கரை, அக். 10:

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், மக்கும் கழிவு, மறுசுழற்சிக் கழிவு, அபாயகரமான கழிவு மற்றும் சிறப்புக் கழிவு என நான்கு வகைக் கழிவுகளையும் முறையாகப் பிரித்து வழங்கும் வீடுகளில் அங்கீகார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடையே கழிவுப் பிரிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், மறுசுழற்சியை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கீழக்கரை நகராட்சி இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

Spread the love