October 16, 2026

ராமநாதபுரத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சைத் துறை சார்பில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அக்டோபர் 7 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர். மார்பக சுயபரிசோதனை மற்றும் ஆரம்பகால நோயறிதலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம்களில் பெண்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பெண் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

Spread the love