கரூர், அக். 16
மாவீரர் மக்கள் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத் தொடக்க விழா மற்றும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு மிகவும் எழுச்சியுடன் கருரி ல் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குமாவீரர் மக்கள் கழகத்தின் தலைவர் M.K.பாஸ்கரன்தலைமை தாங்கினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் M.P.சதாசிவம்*வரவேற்றார்.பொதுச்செயலாளர் அ.சரவணன் முன்னிலை வகித்தார்.இதில் திருச்சி வேலுச்சாமி (செய்தி தொடர்பாளர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி)உ.தனியரசு (முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தலைவர் – கொங்கு இளைஞர் பேரவை) K.M.செரிப் (தலைவர் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி)உள்பட பலர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 11 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மாநில பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அறிவித்த பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமைக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்து கொள்வது மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவது குறித்தும் :சேலம் மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் விநியோகத்தை தனியார்மயமாக்கும் ஒப்பந்தத்தை, தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கடந்த மாதத்தில்சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் மக்கள் கழகக் கொடி மற்றும் கொள்கை அறிமுக விழா வெற்றிகரமாக நடந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

More Stories
தேனி மாவட்டம்
திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம்.
கரூரில் கொட்டி தீர்த்த மழை.