மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக முடக்கப்பட்டிருப்பது பற்றி…
மக்களவை
எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக மக்களவை தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் முடங்கியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கினர்.
இந்த நிலையில், நேற்றுமுதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலையும் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கபட்டுள்ளன.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது