November 4, 2026

பழனியில் களமிறங்கிய எஸ்.பி ஜெயக்குமார் ஐ.பி.எஸ்

 பழனி நவம்பர் 4 

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பழனியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் இரண்டு மணி நேரம் நேரடியாக நடை ரோந்து (FOOT PATROL) பணியில் ஈடுபட்டார்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் தொடங்கிய ரோந்து பணி, சன்னதி ரோடு வழியாக பழனி பேருந்து நிலையம் சென்றடைந்தது. அங்கு பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் நேரடியாகக் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மயில் ரவுண்டானா, ஆர் எப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் தெரிவித்த குறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணிகள் தொடர்ந்து உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

மக்களின் பாதுகாப்பிற்காக அதிகாரி நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Spread the love