சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.
மேலும், சென்னை எழும்பூர்–திருநெல்வேலி, தாம்பரம்–மானாமதுரை, எழும்பூர்–திருச்சி இடையே நவம்பர் 6 முதல் 10 வரை பல்வேறு நேரங்களில் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

More Stories
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி புதுவை அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்
ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் – விற்பனையை தொடங்கிவைத்தார் அமைச்சர் காந்திராஜ்
டெட் தேர்வு வழக்கு நிலுவை: 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு