November 5, 2026

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும்.

மேலும், சென்னை எழும்பூர்–திருநெல்வேலி, தாம்பரம்–மானாமதுரை, எழும்பூர்–திருச்சி இடையே நவம்பர் 6 முதல் 10 வரை பல்வேறு நேரங்களில் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Spread the love