பழனி நவம்பர் 23
பழனி முருகன் மலைக் கோவிலில் நாளை மாலை 6:00 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பழனி முருகன் மலைக் கோவிலில் நாளை திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்பு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. அதன் பின்பு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்பு மாலை 4 மணிக்கு சாய ரட்சை பூஜையும், 4.45 மணிக்கு முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் உலா வரும் காட்சி நடைபெறுகிறது. பின்பு மலைக்கோவிலில் நான்கு மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு மாலை 6 மணிக்கு மலைக்கோயில் தீபஸ் கம்பத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஹரிஹரன் செய்து வருகிறார்.

More Stories
கரூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுக் குழு கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர்.
25-11-2026
இராமநாதபுரம் மாவட்டம்