February 21, 2026

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட திமுக சார்பில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படிருப்பது தொடர்பாக…

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட  6  பேர் கொண்ட குழு

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு

சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணையக் குழு பிப்.25 முதல் 27-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனிடையே, ஏப்ரலில் தோ்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Spread the love