ராமநாதபுரம் மாவட்டம் அம்மன் கோவில் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இப்பகுதிக்கு அருகில் பன்னிரண்டாவது பட்டாலியனுக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் இந்த நிலையில் அதன் அருகாமையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் புதிய கல்லறைத் தோட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கல்லறைத் தோட்டம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் நீர் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்கும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், மாற்று இடமாக அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் கல்லறைத் தோட்டத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

More Stories
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
நாமக்கல் மாவட்டம்