விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிதாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த நிர்வாகிகளுக்கு நேர்காணல்.
ஒட்டன்சத்திரம் மார்ச்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் ஆகியவற்றிற்கு புதிதாக பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த நிர்வாகிகளுக்கு நேர் காணல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒட்டன்சத்திரம் சட்ட மன்ற தொகுதி மாவட்ட செயலாளர் கணபதி தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் மண்டல மாவட்ட செயலாளர் பேராசிரியர் வி.ஜான்சன் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல துணைச் செயலாளர் ஜலால் முகமது, மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 80-க்கும் மேற்பட்ட பாறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்