பழனி மே 14
பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் நிறுவன தலைவர் என் ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சனாதன தர்மம் என்பது நம் பாரம்பரியத்தின் அடித்தளமாக இருந்து அறம் ஒழுக்கம் மனிதநேயம் பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதை ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் ஆகும். சட்டசபை என்பது மக்கள் நலனுக்காக விவாதிக்க படும் இடம். அது மதங்களை தாக்கும் மேடை அல்ல. உதயநிதியின் கருத்தை தமிழ்நாடு பிராமண சமாஜம் கடுமையாக கண்டிக்கிறது. அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மத ஒற்றுமையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.