நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த தேங்காய்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபிரசாத். இவரது அத்தை மகனான விஷாலின் திருமண விழா கடந்த 08.05.2026 அன்று நடைபெற்றது.இந்த திருமணத்திற்கு உறவினர்களின் அழைப்பின் பேரில் லோக சூர்யா என்பவர் விஷாலின் திருமணத்திற்கு வந்திருந்தார்.
திருமண நிகழ்ச்சியின் போது, லோகு சூர்யாவுடன் சில நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ரகுபிரசாத், “அவன் ஒரு குற்றவாளி, அவனுடன் யாரும் பேசாதீர்கள்” என உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த லோகு சூர்யா,ரகு பிரசாத்தை தொலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு நேரில் வரும்படி அழைத்துள்ளார்.அப்போது நேரில் வந்த ரகு பிரசாத்தை லோகு சூர்யா தகாத வார்த்தையில் பேசி அவரது கன்னத்தில் அடித்து அவரது இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துள்ளார்.
பைக் தீப்பற்றி எரியும் காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த நிலையில்,அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இது தொடர்பாக ரகு பிரசாத் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,தலைமறைவாக இருந்த லோகு சூர்யாவை இன்று கைது செய்து நீதிமன்ற காவல் மூலமாக சிறையில் அடைத்தனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் பேருந்து நிலைய நுழைவாயிலில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4,21,250 பணம் பறிமுதல் செய்யப்பட்டது
வரலாற்றில் முதல்முறையாக