கடந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் நடப்பு சீசனில் கூடுதலாக 10 போட்டிகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 19 ஆவது சீசன் இந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

More Stories
மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து: சீன தைபேவிடம் வீழ்ந்தது இந்திய அணி
“தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி” – சூர்யகுமார் யாதவ்
மேற்கு ஆசிய போர் பதற்றம்: ஆப்கனுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ரத்து செய்தது இலங்கை!