May 22, 2026

அகில இந்திய கூடைப்பந்து போட்டி

அகில இந்திய கூடைப்பந்து போட்டி,சென்னை இந்தியன் வங்கி அணி சுழல் கோப்பை வென்றது தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் பீ.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவுச் சுழல் கோப்பைக்கான 65-ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 15ம் தேதி தொடங்கி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணியும்,புதுடில்லி ஓ.எம்.ஜி.சி அணிக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியன் வங்கி சென்னை அணி 84 க்கு 62 என்ற புள்ளி கணக்கில் வெற்றி 1-வது இடத்தை வென்று சுழல் கோப்பையை கைப்பற்றியது.அதைத்தொடர்ந்து, ஓ.எம்.ஜி.சி டெல்லி அணி 2-வது இடத்தையும், புதுடெல்லி விமானப்படை அணி 3-வது இடத்தையும், சென்னை விடுதி மாணவர் அணி 4-வது இடத்தையும் பெற்றனர்.கோப்பையை வென்ற இந்தியன் வங்கி சென்னை அணிக்கு பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பை மற்றும் ரூபாய் 50,000 ரொக்க பணத்தை சில்வர் ஜூப்ளி விளையாட்டுக் கழக தலைவர் சுவாமி நடேச ஆனந்த் சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து பரிசு கோப்பை வழங்கினார்.மேலும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி சிறந்த விளையாட்டு வீரராக தேர்வான இந்தியன் வங்கி அணியை சேர்ந்த தணேஸ்வருக்கு ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் சிறப்பு விருந்தினர் தேனி அருண் மோட்டார்ஸ் நிறுவனர் பாண்டியன் பரிசாக வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.இவ் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு கழக செயலாளர் சிதம்பர சூரிய வேலு மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love