வாஷிங்டன்: அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப். 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த போர் நிறுத்தம் அடுத்த 60 நாட்கள் அமலில் இருக்கும். அதற்குள் இறுதி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இருதரப்பு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இந்த சூழலில் 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறும்போது, “ஈரான் தரப்பு வெள்ளை கொடியை காட்டி சரண் அடைய வேண்டும் என்ற எனது முடிவில் மாற்றம் கிடையாது” என்று தெரிவித்தார்.
ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, “போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா அடிக்கடி மீறியது. இதனால் ஒப்பந்தம் கையெழுத்தானதில் எந்த பயனும் இல்லை” என்று தெரிவித்தார்.

More Stories
16 வயதிலேயே சிஏ பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவன்
இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஹோர்மூஸ் நீரிணையை திறக்கும் முயற்சிக்கு தடையாக இருந்தால் ஓமன் மீது குண்டு வீசுவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை