June 10, 2026

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி

முலான்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 300 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்​றது.

நியூசண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெற்ற இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 127 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 564 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் ஷுப்​மன் கில் 126, கே.எல்​.​ராகுல் 100, ரிஷப் பந்த் 81, வாஷிங்​டன் சுந்​தர் 52 ரன்​கள் சேர்த்​தனர்.

இதையடுத்து விளை​யாடிய ஆப்​கானிஸ்​தான் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 39.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 113 ரன்​கள் எடுத்​தது. ரஹ்மத்ஷா 43 ரன்​களு​டன் களத்​தில் இருந்தார். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளையாடிய ஆப்​கானிஸ்​தான் அணி 58.4 ஓவர்​களில் 152 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. ரஹ்மத் ஷா 60 ரன்களில் மானவ் சுதார் பந்​தில் போல்​டா​னார்.

அஸ்​மதுல்லா ஒமர்​ஸாய் 0, ஷராஃபு​தின் அஷ்ரப் 11, முகமது சலீம் 0, ஜியா​வூர் ரஹ்​மான் 6 ரன்​களில் நடையை கட்​டினர். இந்​திய அணி தரப்​பில் அறி​முக இடதுகை சுழற்​பந்து வீச்​சாள​ரான மானவ் சுதார் 22 ஓவர்​களை வீசி 10 மெய்​டன்​களு​டன் 33 ரன்​களை விட்டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். பிரசித் கிருஷ்ணா 3 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார்.

பாலோ-ஆன் பெற்ற ஆப்​கானிஸ்​தான் அணி 412 ரன்​கள் பின்தங்கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை தொடர்ந்து விளையாடிய நிலை​யில் மீண்​டும் ஒரு முறை சுழற்​பந்து வீச்சைதாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 35.5 ஓவர்​களில் 112 ரன்​களுக்கு சுருண்​டது.

அதி​கபட்​ச​மாக செதி​யுல்லா அடல் 42, ரஹ்மனுல்லா குர்​பாஸ் 24, ரஹ்மத் ஷா 13 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்க ரன்னை எட்​ட​வில்​லை. இந்​திய அணி தரப்​பில் வாஷிங்​டன் சுந்​தர் 4, குல்​தீப் யாதவ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். மானவ் சுதார், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்பற்​றினர்.

இன்​னிங்ஸ் மற்​றும் 300 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை கைப்பற்றி கோப்​பையை வென்​றது. ஆட்ட நாயக​னாக மானவ் சுதார் தேர்​வா​னார்.

டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் அதிக அளவி​லான ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற போட்டி​யாக இது அமைந்​தது. இதற்கு முன்​னர் கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்கோட்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதிரான டெஸ்​டில் இந்​திய அணி இன்​னிங்ஸ் மற்​றும் 272 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​ததே சாதனை​யாக இருந்​தது.

Spread the love