November 2, 2026

இண்டியா கூட்டணி பேரணியால் ரூ.10,000 கோடி இழப்பு: டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இண்டியா கூட்டணி கட்சியினர் நேற்று (நவ.1) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்து ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இண்டியா கூட்டணியின் பேரணியால் வணிகர்களுக்கு வர்த்தம் பாதிக்கப்பட்டதாக வணிக மற்றும் தொழில் சபையின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“இண்டியா கூட்டணி கட்சிகளின் நேற்றைய பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தால் ராம்லீலா மைதானம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சந்தைகள் பாதிக்கப்பட்டன. இதில் மட்டும் சுமார் 3 லட்சம் அங்காடிகள் உள்ளன. அதில் சுமார் 80 சதவீத அங்காடிகள் அடைக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

தீபாவளி வர்த்தகம் இதனால் பாதிக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து முடங்கியது. அங்காடிகள் செயல்பட்ட சில இடங்களிலும் வாடிக்கையாளர்களின் வருகை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரூ.10,000 கோடி (தோராயமாக) மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ‘இந்த இழப்பை ஈடு செய்வது யார்?’ என்ற கேள்வி எழுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

இண்டியா கூட்டணி பேரணி, பொதுக்கூட்டம்

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இண்​டியா கூட்​டணி சார்​பில் நவம்​பர் 1-ம் தேதி டெல்லி​யில் பேரணி நடை​பெறும் என்று அறிவிக்கப்​பட்​டது.

இதன்​படி நேற்று மதி​யம் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள் திறந்த வேனில் கன்​னாட்​பிளேஸில் இருந்து பேரணி​யாக புறப்பட்​டனர். பின்​னர் ராம்​லீலா மைதானத்​தில் கண்​டன பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது

இதில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, சோனியா, ராகுல், பிரியங்கா, சமாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்​கிரஸ் தலை​வர் மம்தா, ராஷ்டி​ரிய ஜனதா தள மூத்த தலை​வர் தேஜஸ்வி யாதவ், கர்​நாடக முதல்​வர் சிவகுமார், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி, இமாச்​சல பிரதேச முதல்வர் சுக்​விந்​தர் சிங், ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பல்​வேறு மாநிலங்​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் ராம்​லீலா மைதானத்தில் குவிந்தனர்.

இந்த பேரணி, பொதுக்கூட்டம் இப்போது வேண்டாம் என்று டெல்லியை சேர்ந்த வணிகர்கள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இண்டியா கூட்டணி கட்சியினர் திட்டமிட்டபடி தங்களது பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்தினர்.

Spread the love