
சென்னை: திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட இந்த நாளில், திராவிட மாடல் 2.O-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: ”மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலை நிமிர்ந்த நாள்”
1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!
திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.O-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்… உங்கள் அனைவரின் ஆதரவோடு!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

More Stories
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழக அரசு
ஏரலில் இரவில் தூங்கிய மருத்துவரை எழுப்பி கேள்வி கேட்ட தவெக எம்எல்ஏ
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை ஓய்கிறது பிரசாரம்: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!