ஈரானின் புதிய உச்ச தலைவராக மறைந்த அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2026/03/09/mojtaba-kameni-2026-03-09-08-49-27.jpg)
மறைந்த ஈரான் தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உயரிய தலைவராக (Supreme Leader) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானின் அதிகாரம் தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். பிப்ரவரி 28 அன்று தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட மதகுருமார்கள் குழு ஞாயிற்றுக்கிழமை கூடியது.

More Stories
தேசிய உயிரி எரிவாயு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் மோடியுடன் நெதன்யாகு தொலைபேசியில் ஆலோசனை
ராமர் கோயில் காணிக்கை திருட்டு: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்