August 18, 2026

ஈரோடு

default

ஈரோடு,ஆக,18

தின்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு குறித்த கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது ட்ரோன்கள் மற்றும் ரோபோக்களைக் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு தடைகளைக் கடந்து செல்வது மற்றும் எடைகளைத் தாங்கிச் செல்வது ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த ட்ரோன்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரித் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர், நிர்வாகி எம். யுவராஜா, முதல்வர் டாக்டர் ஜெயராமன், சென்னை கருடா ஏர் ஸ்பேஸ் அதிகாரி கே.பி. பொற்செல்வி, இசிஇ (ECE) துறைத் தலைவர் நிஷா அஞ்சலின் மற்றும் பேராசிரியர் அஸ்வத் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

Spread the love