April 27, 2026

உண்மையில் தேர்தல் என்பது திருவிழாதான்: தப்பாட்டக் கலைஞர்கள் மகிழ்ச்சி

சென்னையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசியல் கட்சி பிரச்சாரத்தில் இசைத்த தப்பாட்ட கலைஞர்கள்.

சென்னை: இந்த தேர்​தலில் நல்ல வரு​வாய் ஈட்​டிய மகிழ்ச்​சி​யில் உள்ள தப்​பாட்​டக் கலைஞர்​கள் (தப்பு செட்​டு), உண்​மை​யில் தேர்தல் என்​பது எங்​களுக்கு பெரிய திரு​விழா​தான் என்​றனர்.

சென்​னை​யில் கோயில் திரு​விழாக்​கள், கட்சி விழாக்​கள், இல்ல விழாக்​கள், இறுதி ஊர்​வலம் என எது​வாக இருந்​தா​லும் முதலில் வந்து நிற்​பவர்​கள் தப்​பாட்​டக் குழு​வினர்​தான்.

இவர்​கள் வந்த பிறகு​தான் விழாவே களை​கட்​டு​கிறது. நடந்து முடிந்த தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது, சென்​னை​யில் கட்சி வேட்​பாள​ருக்கு முன்​பாக இந்த தப்​பாட்​டக் குழு​வினர்​தான் சென்​றனர்.

அந்த ஓசையைக் கேட்​டுத்​தான், வேட்​பாளர் வரு​கையை அறிந்து பொது​மக்​களும் வீட்​டை​விட்டு வெளி​யில் வந்​தனர். தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் முக்​கிய அங்​க​மாகவே தப்​பாட்​டக் கலை மாறி​விட்​டது. இந்த தேர்​தலால் அவர்​களுக்கு நல்ல வரு​வா​யும் கிடைத்​துள்​ளது.

இது தொடர்​பாக, வேட்​பாளர் ஒரு​வருக்கு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்டு வந்த கலைஞர்​கள் சிலர் கூறிய​தாவது: வழக்​க​மாக மாதம் சுமார் 7 முதல் 10 நிகழ்ச்​சிகளுக்கு அழைப்​பார்​கள். அதன் மூலம் ஒரு நபருக்​கு, நிகழ்ச்சி ஒன்​றுக்கு சுமார் ரூ.800 வரு​வாய் கிடைக்​கும்.

மாதத்​துக்கு அதி​கபட்​ச​மாக ஒரு நபர் ரூ.10 ஆயிரம் சம்​பா​திக்க முடி​யும். மற்ற நாட்​களில் வீடு​களுக்கு பெயின்​டிங் வேலை உள்​ளிட்ட பல்​வேறு வேலைகளுக்கு சென்​று​விடு​வோம்.ஆனால், இப்​போது தேர்​தல் வந்​த​தால், கடந்த மார்ச் 15-ம் தேதி முதலே நாங்​கள் பிசி​யாகி​விட்​டோம்.

தின​மும் காலை, மாலை வேலை கிடைத்​தது. ஏப்​.21-ம் தேதி வரைக்​கும் தின​மும் வேலை கிடைத்​தது. இதற்கு முன்பு தமிழகத்​தில் தேர்தல் அறி​வித்த நாளி​லிருந்து விரை​வாக தேர்​தல் நடத்தி முடிக்​கப்​படும். அதற்​கடுத்த கட்​டங்​களில்​தான் பிற மாநிலங்​களில் நடக்​கும்.

ஆனால், இந்​தத் தேர்​தலில் தமிழகத்​துக்கு தாமத​மாக நடத்​தப்​பட்​ட​தால், சுமார் 35 நாட்​கள் தேர்​தல் பரபரப்​பும், பிரச்​சா​ரங்​களும் நீடித்​தன.

அதனால் நல்ல வரு​வா​யும் கிடைத்​தது. இந்​தத் தேர்​தலில் ஒவ்​வொரு​வரும் ரூ.45 ஆயிரம் வரை வரு​வாய் ஈட்​டி​யிருக்​கிறோம். உண்​மை​யில் எங்​களுக்கு தேர்​தல் என்​பது ஒரு திரு​விழா​தான்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

Spread the love