சென்னை: ‘காதல் என்ற பெயரில் கட்டுப் பாடு விதிப்பது அராஜகம்; அது காதலே அல்ல’ என சிங்கப் பெண் அதிரடிப் படை தலைவர் பவானீஸ்வரி தெரிவித்தார்.
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை சார்பில் சமூக வாழ்வில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் மற்றும் முத லாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி நேற்று நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிங் கப்பெண் சிறப்பு அதிரடிப் படையின் தலைவர் பவானீஸ் வரி கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர்
பேசியதாவது: காதல் என்கிற பெயரில் இந்த உடையைத்தான் அணிய வேண்டும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதும், திருமணம் செய்ய வில்லை என்றால் வாழ விட மாட்டேன் என்று மிரட்டுவதும் உண்மையான காதல் கிடையாது.
இது காதலின் பெயரால் செய்யப்படும் அராஜகம்; மிக மோசமான குற்றமும் ஆகும். இதைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக கடுமையான தண் டனை கிடைக்கும். பிடிக்கவில்லையா? அந்தப் பெண் நன்றாக இருக்கட்டும், சந்தோஷமாக இருக் கட்டும் என்று கடந்து போக வேண்டும்.
நாமும் சந்தோஷமாக வாழப் பழக வேண்டும். என்னுடைய நண்பர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். கணவர் படிக்க வேண்டும் என் பதற்காக மனைவியும், மனைவி முன்னேற வேண்டும் என்பதற் காக கணவனும் பரஸ்பரம் உறுதுணையாக இருக்கிறார்கள்.
இதுதான் உண்மையான அன்பு. ஒருவருடைய உரிமைகளை நாம் பறிக்காமல் இருந்தால், நம் வாழ்க்கையை வெற் றியை நோக்கிச் செல்லும். நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கிறது.
தெளிவான சிந்தனை இருந்தால் எதையும் சாதிக்கலாம். நேர்மையாக உழைத்து வாழ்க்கையில் முன் னேற வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக எந்தச் செயலைச் செய்தாலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்றால், சுயமான முடிவுகளை நீங்களே எடுக்க வேண்டும். நல்ல புத்தகங்களை வாசித்தால் மட்டுமே சிந்தித்துச் சரியான முடிவுகளை எடுக்க முடியும். நம்முடைய இலக்கை அடைவதற்காகத் தினமும் அதற்கேற்ற பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
அதே வேளையில், தீய பழக்க வழக்கங்கள் உங்களைக் கீழே தள்ளிவிடும் என்பதில் எச்சரிக் கையாக இருங்கள். முழுமையான விழிப் புணர் வோடு யோசித்தால் எதற்காகவும் பயப் படத் தேவையில்லை. எங்கும், எப்போதும் குற்றம் நடக்கக் கூடாது என்கிற மனநிலையும், சமூகப் பொறுப்புணர்வும் ஒவ் வொருவரிடமும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
78 வழக்குகள் பதிவு
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இதுவரை 78 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கான அவசர உதவி எண் 1091-க்குத் தினசரி 1,400-க்கும் மேற்பட்ட அழைப்பு கள் வருகின்றன.
அதில் சுமார் 800 அழைப்புகள் காவல் துறை நேரடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தன்மையில் உள்ளன. இதுதவிர இதுவரை 9 குழந்தை திருமணங்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்தப்பெண் பிள் ளைகள் தற்போது தொடர்ந்து கல்வி கற்று வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தற் போது 78 சிங்கப்பெண் அதிரடிப் படை குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை மேலும் விரிவுபடுத்தி, ஒவ்வொரு சப் -டிவிஷன் அளவிலும் செயல்படும் வகையில், இக்குழுக்களின் எண்ணிக்கையை 270 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

More Stories
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: அதிமுக மகளிரணி கூட்டத்தில் பழனிசாமி கருத்து
முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூரை முன்மாதிரி தொகுதியாக மாற்ற திட்டம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
மயக்கமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு