August 8, 2026

கால்பந்து போட்டியில் திருப்பூர் மாணவர்கள் சாதனை

ஜூன் 10

திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்கள் உள்ளடக்கிய வீரபாண்டி அவெஞ்சர்ஸ் அகாடமி யை சேர்ந்த பயிற்சியாளர்களான அருண்பிரகாஷ், திவ்ய பாரதி, ஹரிரஜா ஆகியோர் தலைமையில் கடந்த ஜூன் 5, 6, 7 ஆம் தேதிகளில் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா ஸ்டேடியத்தில் நடைபெற்ற 14 வது SBKF தேசிய அளவிலான கால்பாந்து போட்டியில் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று 12 தங்கப்பதக்கமும், 2 சில்வர் பதக்கமும் வென்றனர். மேலும் அதனை தொடர்ந்து அடுத்த மாதம் நேபாளம் பொக்காராவில் ஜூலை 23 — 27-ந்தேதி வரை நடை பெறும். சப்பிகஃ சர்வதேச அளவில் நடைபெற்றும் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டிற்கு திருப்பூருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த வீரர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி மற்றும் சிகரம் தொடுவோம் அறக்கட்டளை நிறுவனர் அன்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Spread the love